ADDED : செப் 27, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லுாரி மாணவி மாயம்
குமாரபாளையம், செப். 27-
குமாரபாளையம், கம்பன் நகரை சேர்ந்த, 19 வயது மாணவி, தனியார் பொறியியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணியளவில் வீட்டில் இருந்தவர், திடீரென காணாமல் போய் விட்டார். அக்கம் பக்கம் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர் அளித்த புகரர்படி, குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.