/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தியாகராஜ பாகவதரின் நினைவு நாள் அனுசரிப்பு
/
தியாகராஜ பாகவதரின் நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : நவ 02, 2025 12:47 AM
நாமக்கல் தியாகராஜ பாகவதர் நற்பணி சங்கம் சார்பில், தியாகராஜ பாகவதரின், 66ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடந்தது. மன்ற தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்து, தியாகராஜ பாகவதரின் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
'நாமக்கல்லில் தியாகராஜ பாகவதருக்கு மார்பளவு சிலை அமைக்க வேண்டும்' என, தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எம்.பி., ராஜேஸ்குமார், அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தனர். தியாகராஜ பாகவதரின் புகழை பரப்பும் வகையில், அவரது பாடல்கள் பாடப்பட்டன. மன்ற நிர்வாகிகள் நாகராஜன், நடராஜன், ரவி, பூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

