/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தியாகராஜ பாகவதரின் நினைவு நாள் அனுசரிப்பு
/
தியாகராஜ பாகவதரின் நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : நவ 02, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகராஜ பாகவதரின் நினைவு நாள் அனுசரிப்பு
நாமக்கல், நவ. 2-
தியாகராஜ பாகவதர் நற்பணி மன்றம் சார்பில், நாமக்கல் அண்ணாதுரை சிலை அருகே, தியாகராஜ பாகவதரின், 65-வது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. மன்ற தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாகவதரின் உருவ படத்திற்கு, மாலை அணிவித்து, மலர்துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, நாமக்கல்லில் தியாகராஜ பாகவதருக்கு மார்பளவு சிலை அமைக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

