தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மதநல்லிணக்க ஆர்ப்பாட்டம்

மதநல்லிணக்க ஆர்ப்பாட்டம்

மதநல்லிணக்க ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 29, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:'திருப்பரங்குன்றம் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்பதை வலியுறுத்தி, நாமக்கல்லில் மதநல்லிணக்க மக்கள் ஒற்றுமை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல் நேதாஜி சிலை முன் தொடங்கிய பேரணி, பூங்கா சாலையில் முடிந்தது. தொடர்ந்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மா.கம்யூ., மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். காங்., முன்னாள் மாவட்ட தலைவர் சித்திக், வி.சி.க., மண்டல செயலாளர் மணிமாறன், இந்திய கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. நீதி பரிபாலன நெறிகளுக்கு முரணான இத்தீர்ப்பை, உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். காங்., மாநகர தலைவர் ஸ்டாலின் சுப்ரமணியம், மண்டல தலைவர்கள் கோவிந்த், சரவணபிரபு, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us