ADDED : நவ 29, 2026 06:34 AM
திருச்செங்கோடு:திருச்செங்கோடு அருகே, பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தார்.
நாமக்கல்
மாவட்டம், திருச்செங்கோடு சட்டையம்புதுாரை சேர்ந்தவர் சவுந்தர்,
45; பாத்திரக்கடை வைத்துள்ளார். இவரது மகள் தக்ஷதா, 15; இவர்,
தோக்கவாடியில் உள்ள தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து
வந்தார். நேற்று, பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடந்தது. இதில்,
சிறுமியின் தாய் யசோதா பங்கேற்றார். மதியம், 3:30 மணிக்கு, பள்ளி முதல்
தளத்தில் நடந்து சென்ற தக்ஷதா, திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு
திருச்செங்கோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு
அவரை பரிசோதித்த டாக்டர், மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக
தெரிவித்தார். இதைக்கேட்ட பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து
திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
