/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எலச்சிபாளையத்தில் மா.கம்யூ., மாநாடு
/
எலச்சிபாளையத்தில் மா.கம்யூ., மாநாடு
ADDED : செப் 25, 2024 07:10 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம், சத்யா நகர் பகுதியில் நடந்த மா.கம்யூ., கட்சி கிளை மாநாட்டில், ஒன்றியக்குழு உறுப்பினர் மாரிமுத்து, மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
இதில், நல வாரிய பதிவுகளில் ஓய்வூதியம் பெறும் முதியோர்களிடம், 5,000 முதல் 10,000 ரூபாய் வரை லஞ்சமாக வாங்கும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் பதிவு மூலம் அலைகழிக்காமல் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். சந்தைப்பேட்டை, சத்யா நகர் பிரிவு மெயின் ரோடு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.