/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'பறவை காய்ச்சல் பாதிப்பில் இறக்கும் கோழிகளுக்கு இழப்பீடு வழங்க உறுதி'
/
'பறவை காய்ச்சல் பாதிப்பில் இறக்கும் கோழிகளுக்கு இழப்பீடு வழங்க உறுதி'
'பறவை காய்ச்சல் பாதிப்பில் இறக்கும் கோழிகளுக்கு இழப்பீடு வழங்க உறுதி'
'பறவை காய்ச்சல் பாதிப்பில் இறக்கும் கோழிகளுக்கு இழப்பீடு வழங்க உறுதி'
ADDED : மே 03, 2024 07:26 AM
நாமக்கல் : தமிழ்நாடு கோழிப்பண்ணையணாளர் சங்க தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் மற்றும் கமிஷனர் தலைமையில், புதுடெல்லியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் வல்சன் உள்பட பலர் கலந்து கொண்டோம். கால்நடை பராமரிப்புத்துறை மூலம், கோழிகளுக்கு ஐஎல்டி வேக்சின் வழங்க சங்கம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. மூன்று மாதங்களில் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
முட்டை ஏற்றுமதிக்கு தேவையான, அனைத்து சான்றிதழ்களும் நாமக்கலில் வழங்கக்கூடிய அளவில் ைஹ டெக் லேப் அமைத்து தர சங்கம் மூலம் கொடுத்த கோரிக்கையை ஏற்று, ஆவண செய்து தருவதாக கூறினர். பறவை காய்ச்சல் நோயால் இறப்பு ஏற்படும் கோழிகளுக்கும் மற்றும் அருகிலுள்ள, 1 கி.மீ., சுற்றளவுள்ள கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளையும் அழிக்க அரசுத்துறை சார்பாக உத்தரவு வழங்கும் பட்சத்தில், கோழிகளின் வயதுக்கு ஏற்ப நிவாரண தொகை அல்லது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிவாரண தொகை இதில் எது அதிகமோ அந்த தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.முட்டை ஏற்றுமதி மேலும் அதிகரிக்க, கோழிப்பண்ணைகளுக்கு கம்பார்ட்மென்ட் பார்முக்கான சான்றிதழ் விரைவில் காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். மேலும் மத்திய கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர், மே மாத இறுதியில் நாமக்கல் வருகை தருவதாக கூறியுள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.