/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் உண்டியலில் திருடிய 7 பேரை கைது செய்ய புகார்
/
கோவில் உண்டியலில் திருடிய 7 பேரை கைது செய்ய புகார்
கோவில் உண்டியலில் திருடிய 7 பேரை கைது செய்ய புகார்
கோவில் உண்டியலில் திருடிய 7 பேரை கைது செய்ய புகார்
ADDED : செப் 30, 2025 01:40 AM
குமாரபாளையம் :ஹிந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட, குமாரபாளையம், கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோவிலில், பூசாரி மற்றும் உதவி பூசாரிகள் உள்பட, ஏழு பேர் உண்டியலில் உள்ள பணத்தை திருடி வந்துள்ளனர். இதை கண்டுபிடிக்க உண்டியல் நோக்கி, 'சிசிடிவி'க்கள் பொருத்தபட்டுள்ளன.
இதனால், பதிவுகளை பார்த்தபோது, அக்., 5, 2014 முதல் செப்., 19, 2025 வரை அவ்வப்போது திருடி வந்தது தெரியவந்தது. பூசாரிகளான வேலுமணி, சசிகாந்த், துரைசாமி, சண்முகம், மணி, சிவகுமார், ரவிச்சந்திரன் ஆகிய எழு பேர் திருடிய தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை என்றும், தலைமறைவாக உள்ள சம்பந்தப்பட்ட பூசாரிகளை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சேலம் ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், 42, குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள பூசாரிகளை தேடி வருகின்றனர்