/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சட்ட விரோத மது விற்பனை எஸ்.பி.,யிடம் புகார்
/
சட்ட விரோத மது விற்பனை எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : டிச 20, 2024 01:03 AM
சட்ட விரோத மது விற்பனை எஸ்.பி.,யிடம் புகார்
பள்ளிப்பாளையம், டிச. 20-
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் ஆவாரங்காடு, காவிரி, ஆவத்திபாளையம், தாஜ்நகர், பெரியார்நகர், அக்ரஹாரம், வெப்படை உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் சந்துகடையிலும், பல மளிகை கடையிலும், குடியிருப்பு பகுதியிலும் சட்ட விரோதமாக மது விற்பனை இரவு, பகலாக நடந்து வருகிறது.
சட்ட விரோத மதுபாட்டில் விற்பனையால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து தொடர்ந்து பள்ளிப்பாளையம் போலீசாருக்கு புகார் செல்கிறது. பல அமைப்புகள் போராட்டமும் நடத்தினர். ஆனால் போலீசார் பெயரளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுத்தனர்.
கடந்த வாரம் சட்டவிரோத மது பாட்டில் விற்பனை குறித்து புகார் தெரிவித்த குமாரை, சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்ட
எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்.
அப்போது சபரிநாதன் என்பவர்,
எஸ்.பி.,யை நேரில் சந்தித்து, 'பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் சட்ட விரோத மது பாட்டில் விற்பனை அதிகரித்துள்ளதால் குற்ற செயல்கள் நடக்கிறது. போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே மது பாட்டில் விற்பனை நடக்கிறது. நேரடியாக சட்ட விரோத மது பாட்டில் விற்பனை செய்யும் இடத்தை காட்டுகிறேன்' என, தெரிவித்தார்.
உடனடியாக எஸ்.பி., 'சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்' என, பள்ளிப்பாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.