/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வர 25ல் நாமக்கல்லில் முழு கடையடைப்பு
/
பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வர 25ல் நாமக்கல்லில் முழு கடையடைப்பு
பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வர 25ல் நாமக்கல்லில் முழு கடையடைப்பு
பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வர 25ல் நாமக்கல்லில் முழு கடையடைப்பு
ADDED : நவ 21, 2024 05:59 AM
நாமக்கல்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.
மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமை வகித்தார். நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்க செய-லாளர் கருணாகரன் வரவேற்றார்.பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் மாணிக்கம், மருந்து வணிகர்கள் சங்க மாநில பொருளாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நாமக்கல் நகரில் பஸ்களை ஆங்காங்கே சாலை-யோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி விடுவதால் போக்கு-வரத்து நெரிசல் ஏற்பட்டு பஸ் பயணிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். அதனால், நகருக்குள் போக்குவரத்தை சீர்-செய்ய வேண்டும். நாமக்கல் நகரில், 60 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வந்த பழைய பஸ் ஸ்டாண்டிற்குள், பஸ்கள் வந்து செல்-வதற்கு போதுமான வழி உள்ளது.
ஆனால், பஸ்கள் உள்ளே வந்து செல்வதில்லை. இதனால், பஸ் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும், பஸ் ஸ்டாண்டில் நீண்டகாலமாக கடைகள் வைத்து நடத்தி வரும் வியாபாரிகளும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்லக்கோரி, பொதுமக்களுடன் இணைந்து, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், வரும், 25 காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை, நாமக்கல் நகரம் முழுவதும் முழு கடை-யடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
பேரமைப்பில் இணைந்துள்ள, 46 வணிகர் சங்கங்களின் ஆதர-வோடு, இந்த கடையடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.