/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாறைகளை வெட்டிய 'கம்ப்ரசர்' பறிமுதல்
/
பாறைகளை வெட்டிய 'கம்ப்ரசர்' பறிமுதல்
ADDED : ஆக 31, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை
ஒன்றியத்திற்குட்பட்ட நாரைகிணறு புதிய மாரியம்மன் கோவில் அருகே,
சட்ட விரோதமாக பாறைகள் உடைக்கப்பட்டு வருவதாக, கனிம
வளத்துறையினருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, கனிமவளத்துறை
உதவி புவியியலாளர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு
சென்று ஆய்வு செய்தனர். அப்போது பாறையை உடைத்துக்கொண்டிருந்த
நபர்கள் கம்ப்ரசர் டிராக்டரை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
அவற்றை பறிமுதல் செய்த கனிமவளத்துறை அதிகாரிகள், ஆயில்பட்டி
போலீசில் ஒப்படைத்தனர். மேலும், பாறையை உடைத்து விற்பனை செய்தவர்கள்
மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென புகார் கொடுத்தனர்.

