/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய லோக் அதாலத் 1,000 வழக்கில் ரூ.10.92 கோடிக்கு சமரச தீர்வு
/
தேசிய லோக் அதாலத் 1,000 வழக்கில் ரூ.10.92 கோடிக்கு சமரச தீர்வு
தேசிய லோக் அதாலத் 1,000 வழக்கில் ரூ.10.92 கோடிக்கு சமரச தீர்வு
தேசிய லோக் அதாலத் 1,000 வழக்கில் ரூ.10.92 கோடிக்கு சமரச தீர்வு
ADDED : டிச 15, 2024 03:05 AM
நாமக்கல்: மாவட்டத்தில், நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில், 1,000 வழக்குகளில், 10.92 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்-டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தல்படி, நாமக்கல் மாவட்-டத்தில் நாமக்கல், ராசிபுரம், பரமத்தி, திருச்செங்கோடு, ஒருங்கி-ணைந்த நீதிமன்ற வளாகங்கள், சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய நீதிமன்றங்களிலும், தேசிய லோக் அதாலத் நேற்று நடந்-தது.நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதி மன்றத்தில், மாவட்ட முதன்மை நீதிப-தியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரு-மான குருமூர்த்தி உத்தரவுப்படி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பாலகுமார் முன்னிலையில் நடந்தது. தேசிய லோக் அதாலத்தில், வழக்குகள் சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. நீதிபதிகள் சாந்தி, விஜய்கார்த்திக், பிரவீனா, விஜயகுமார், கண்ணன், விக்னேஷ் மது ஆகியோர் விசாரணை செய்தனர். சார்பு நீதிபதி வேலுமயில் வழக்கு விசார-ணையை மேற்பார்வை செய்தார்.
அதேபோல், ராசிபுரம், பரமத்தி, திருச்செங்கோடு, சேந்தமங்-கலம், குமாரபாளையம் ஆகிய நீதிமன்றங்களிலும் நடந்த தேசிய லோக் அதாலத்தில், வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டன. இந்த தேசிய லோக் அதாலத்தில், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில், சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்-குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்-குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், உரி-மையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி உள்ளிட்ட பிரச்னைகள் அடங்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும், புதிதாக தாக்கல் செய்யக்கூடிய வழக்குகள் மற்றும் பிரச்னைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில், மொத்தம், 2,670 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், 1,000 வழக்-குகளில், 10 கோடியே, 91 லட்சத்து, 96,837 ரூபாய் செலுத்தப்-பட்டு தீர்வு காணப்பட்டது.