/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காரில் கடத்திய 'சரக்கு' பறிமுதல்
/
காரில் கடத்திய 'சரக்கு' பறிமுதல்
ADDED : டிச 04, 2024 06:55 AM
நாமக்கல்: நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள அண்ணாதுரை சிலை அருகே, போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்களை கடத்தி வருவது தெரியவந்தது.
போலீசார், மதுபான பாட்டில்களுடன் காரை, நாமக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியனிடம் ஒப்படைத்தனர். அவர் காரில் இருந்த, 283 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். மேலும், காரில் வந்த விழுப்புரம் மாவட்டம், கோலியனுாரை சேர்ந்த சுரேஷ், 36, சிவா, 24, அஜித், 36 ஆகிய 3 பேரை கைது செய்தார். விசாரணையில், அவர்கள் புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மதுபான பாட்டில்களை வாங்கி வந்து, நாமக்கல் மாவட்டம் மோகனுாருக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.