/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கட்டுமான தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
/
கட்டுமான தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 04, 2025 01:23 AM
நாமக்கல் ;கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக்கோரி, மாவட்ட கட்டட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அசோகன் தலைமை வகித்தார். அதில், தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், 5,000 ரூபாய்- வழங்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர் வாரிய கூட்ட முடிவின்படி ஓய்வூதியம், 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு, 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீடுகட்டும் திட்டத்தை எளிமையாக்கி உடனடியாக ஆணையும், நிதியும் வழங்க வேண்டும். மாவட்ட செயலாளர் சிவராஜ், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.