/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த ஆலோசனை கூட்டம்
/
காவிரி உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த ஆலோசனை கூட்டம்
காவிரி உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த ஆலோசனை கூட்டம்
காவிரி உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 31, 2024 07:16 AM
நாமக்கல்: காவிரி உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த, பாசன விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''மேட்டூர் அணையில் வெள்ள உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரை, நிலத்தடி நீரை செரிவூட்ட பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கரையோரங்களில் கால்நடைகள் மேய்க்கப்பட்டு வருவதால், தண்ணீரில் அடித்து செல்லாத வகையில் பாதுகாக்கும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.வாய்க்கால்களில் உள்ள அனைத்து மதகுகளும் நல்ல முறையில் செயல்படுவது குறித்து உறுதி செய்ய வேண்டும். ஆடிப்பெருக்கு விழாவில் மக்கள் கூடும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை பதாகைகளையும் அமைக்க வேண்டும்,'' என்றார்.டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாலகிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குனர் (பொ) கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.