/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவை வழக்குகளை இணையவழியில் விசாரிக்க நுகர்வோர் நீதி மன்றம் முடிவு
/
கோவை வழக்குகளை இணையவழியில் விசாரிக்க நுகர்வோர் நீதி மன்றம் முடிவு
கோவை வழக்குகளை இணையவழியில் விசாரிக்க நுகர்வோர் நீதி மன்றம் முடிவு
கோவை வழக்குகளை இணையவழியில் விசாரிக்க நுகர்வோர் நீதி மன்றம் முடிவு
ADDED : பிப் 16, 2024 10:52 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோயம்புத்துார் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்த, 50 வழக்குகள் விரைவான விசாரணைக்காக, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் விசாரணை நேரடியாகவும், இணையதள வழியிலும் வேலை நாட்களில் தினமும் மதியம், 2:30 மணிக்கு நடைபெறும். மாறுதலாகி உள்ள வழக்குகளின் முதல் விசாரணை வரும், 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
வழக்கு தாக்கல் செய்தவர்களும், எதிர் தரப்பினரும் அவர்களது வழக்கறிஞர்களும் தவறாது முதலாவது விசாரணையில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாறுதலாகி உள்ள வழக்குகளை, மூன்று மாதத்துக்குள் தீர்வு காண மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளதால், வழக்கின் தரப்பினர்கள் ஒத்துழைக்குமாறு வேண்டப்படுகிறது.
இதே போல் கடந்த, ஒன்பது மாதத்தில், இரு ஆண்டுகளுக்கு மேல், 10 ஆண்டுகள் வரை நிலுவையில் இருந்த வழக்குகள் முடிக்கப்பட்டு விட்டன. 2022ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், 26 வழக்குகள் மட்டும் நிலுவையில் உள்ளன. இவற்றில் வரும் மார்ச் மாதத்திற்குள் தீர்வு காண வழக்கு தாக்கல் செய்தவர்களும், எதிர் தரப்பினரும் அவர்களது வழக்கறிஞர்களும் ஒத்துழைக்க வேண்டும். இதனிடையே, 2023ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட, 40 வழக்குகளில், 112 நபர்களுக்கு வரும், 21ம் தேதி நடைபெற உள்ள சமரச பேச்சுவார்த்தைக்கு நுகர்வோர் நீதிமன்றம் அறிவிப்பு அனுப்பியுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோயம்புத்துாரில் இருந்து, விரைவான விசாரணைக்காக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட, 84 வழக்குகளை கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பருக்குள் விசாரித்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.