/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடர் மழை எதிரொலி காளை பூட்டி உழவு பணி
/
தொடர் மழை எதிரொலி காளை பூட்டி உழவு பணி
ADDED : அக் 20, 2024 04:17 AM
நாமகிரிப்பேட்டை: தொடர் மழை எதிரொலியால், காளை பூட்டி உழவு பணியை விவசாயிகள் தொடங்கினர்.
ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில், சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்நிலையில், இரண்டு நாட்களாக வெயில் அடிப்பதால் விவசாய பணிகள் தொடங்கியுள்ளன. களை எடுப்-பது, அறுவடை செய்வது, உழவு செய்வது என விவசாயிகள், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.பேளுக்குறிச்சியில் இருந்து கொல்லிமலை அடிவாரம் செல்லும் வழியில், காளை மாடு பூட்டி உழவு பணியில் விவசாயி அத்தி-யப்பன் ஈடுபட்டிருந்தார். இப்பகுதியில் வழக்கமாக டிராக்டர் மூலம்தான் ஏர் உழுவதுண்டு. ஆனால், இவர் அந்தியூர் சென்று காளை வாங்கி வந்து உழவு செய்து வருகிறார். அதேபோல், நிலத்திற்கு ரசாயன உரம் போடாமல் இயற்கை உரத்தைதான் போட்டு வருவதாக கூறினார்.
அறுவடை முடிந்து முதல் உழவு செய்து வருவதாகவும், அடுத்த உழவிற்கு மாடுகளுக்கு சோளப்பயிர் விதைக்க உள்ளதா-கவும் தெரிவித்தார்.