/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் தொடர் மழை 2 நாளில் 894.30 மி.மீ., பதிவு
/
நாமக்கல்லில் தொடர் மழை 2 நாளில் 894.30 மி.மீ., பதிவு
நாமக்கல்லில் தொடர் மழை 2 நாளில் 894.30 மி.மீ., பதிவு
நாமக்கல்லில் தொடர் மழை 2 நாளில் 894.30 மி.மீ., பதிவு
ADDED : அக் 07, 2024 03:46 AM
நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று ஒரே நாளில், 331.80 மி.மீ., மழை பெய்-துள்ளது. இரண்டு நாட்களில், 894.30 மி.மீ., மழை பதிவாகி உள்-ளது.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக கோடையை போல் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. பகல் நேர வெப்பம், 100 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தது. இதனால், பொதுமக்கள், முதியோர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 9:45 மணிக்கு பெய்ய துவங்கிய மழை, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், லேசாகவும், பல இடங்களில் கனமழையும் பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்போல்
பெருக்கெடுத்து ஓடியது. ராசிபுரத்தில், 122 மி.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை பதிவான மழையளவு விபரம்:எருமப்பட்டி, 40, குமாரபாளையம், 9.60, மங்களபுரம், 50.20, மோகனுார், 13, நாமக்கல், 21, ப.வேலுார், 5, புதுச்சத்திரம், 26, ராசிபுரம், 122, சேந்தமங்கலம், 9, திருச்செங்கோடு, 11, கலெக்டர் அலுவலகம், 19, கொல்லிமலை, 6 என,
மொத்தம், 331.80 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த, இரண்டு நாட்களில், 894.30 மி.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.