/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடர் மழையால் 3 நாட்களில் மாவட்டத்தில் 415 மி.மீ., பதிவு
/
தொடர் மழையால் 3 நாட்களில் மாவட்டத்தில் 415 மி.மீ., பதிவு
தொடர் மழையால் 3 நாட்களில் மாவட்டத்தில் 415 மி.மீ., பதிவு
தொடர் மழையால் 3 நாட்களில் மாவட்டத்தில் 415 மி.மீ., பதிவு
ADDED : அக் 16, 2025 01:24 AM
நாமக்கல், தொடர் மழை காரணமாக, நாமக்கல் மாவட்டம் முழுவதும், மூன்று நாட்களில், 415.40 மி.மீ., மழை பெய்துள்ளது. இது, விவசாயிகள், பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய தமிழக கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில், இருவேறு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில், கனமழையும், பல்வேறு பகுதிகளில், லேசான மழையும் பெய்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், பகலில் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. மாலை தொடங்கி, இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், பல்வேறு பகுதிகளில், லேசான மழையும் பெய்து வருகிறது.அதன்படி, நேற்று முன்தினம் மாலை, 5:30 மணி முதல், மாவட்டத்தில் பரவலமாக மழை பெய்ய துவங்கியது. குமாரபாளையம், கொல்லிமலையில் கனமழை பெய்தது. மோகனுார், புதுச்சத்திரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து
ஓடியது. நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை பெய்த மழை விபரம் (மில்லி மீட்டரில்)பின்வருமாறு:
குமாரபாளையம், 35, மங்களபுரம், 9.80, மோகனுார், 12, நாமக்கல், 3, புதுச்சத்திரம், 19, சேந்தமங்கலம், 4, திருச்செங்கோடு, 12.40, கொல்லிமலை, 35 என, மொத்தம், 130.20 மி.மீ., மழை பெய்தது.
நேற்று முன்தினம், 80.40, 12ல், 204.80 என, மூன்று நாட்களில், மாவட்டம் முழுவதும், 415.40 மி.மீ., மழை பதிவாகி உள்ளது
குறிப்பிடத்தக்கது.