/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விபத்து டிராக்டரை ஆர்.டி.ஓ., அனுமதியின்றி உரிமையாளரிடம் ஒப்படைத்ததால் சர்ச்சை
/
விபத்து டிராக்டரை ஆர்.டி.ஓ., அனுமதியின்றி உரிமையாளரிடம் ஒப்படைத்ததால் சர்ச்சை
விபத்து டிராக்டரை ஆர்.டி.ஓ., அனுமதியின்றி உரிமையாளரிடம் ஒப்படைத்ததால் சர்ச்சை
விபத்து டிராக்டரை ஆர்.டி.ஓ., அனுமதியின்றி உரிமையாளரிடம் ஒப்படைத்ததால் சர்ச்சை
ADDED : அக் 10, 2024 03:04 AM
ப.வேலுார்: டிராக்டரில் இருந்து தவறி விழுந்து துாய்மை பணியாளர் இறந்த சம்பவத்தில், பறிமுதல் செய்த வாகனத்தை ஆர்.டி.ஓ., ஆய்வுக்-குட்படுத்தாமல், ப.வேலுார் போலீசார், உரிமையாளரிடம் ஒப்ப-டைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. குப்பை சேகரிக்க, 3 மேஸ்திரிகள், 80 துாய்மை பணியாளர்கள் பணிபு-ரிந்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த, 8 காலை, 9:00 மணிக்கு தனியாருக்கு சொந்தமான டிராக்டரரில், ஐந்து துாய்மை பணியாளர்களுடன் குப்பை சேகரிக்கும் பணியில் டிரைவர் சுப்பிரமணி, 45, ஈடுபட்டி-ருந்தார். அப்போது டிராக்டரில் அமர்ந்து சென்ற துாய்மை பணி-யாளர் சுப்பிரமணி, 48, தவறி விழுந்து உயிரிழந்தார். ப.வேலுார் போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்-தனர்.
இந்நிலையில், பறிமுதல் செய்த டிராக்டரை, ஆர்.டி.ஓ.,விடம் சமர்ப்பித்து அவர் ஆய்வு செய்த பின் தான் பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், விதிமீறி டிராக்டரை, அதன் உரிமையாளரிடம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, பரமத்தி ஆர்.டி.ஓ., சரவணன் கூறுகையில், ''விபத்-துக்குள்ளான வாகனங்களை, வட்டார போக்குவரத்து அலுவல-கத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே, உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். டிராக்டரை ஆய்வு செய்யாமல், போலீசார் ஒப்படைத்தது விதிமீறலாகும். இதுகுறித்து ப.வேலுார் போலீசாரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்,'' என்றார்.
நாமக்கல் டி.எஸ்.பி., முருகேசன் (பொ) கூறுகையில், ''விபத்துக்-குள்ளான வண்டியை வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் ஆய்வுக்கு அனுப்பிய பின்னரே ஒப்படைக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையில் ஒப்படைத்தார்கள் என்பது எனக்கு தெரிய-வில்லை. விபத்து குறித்து விசாரணை செய்யும் எஸ்.ஐ.,யிடம் இதன் விபரம் கேட்டு சொல்கிறேன்,'' என்றார்.