/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் 25 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ADDED : அக் 07, 2025 01:22 AM
நாமக்கல், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சக்தி வேல் தலைமை வகித்தார். செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊதிய உயர்வு வெளிப்படை தன்மையுடனும், சங்கங்களை வகைப்பாடு செய்யாமல், லாப நஷ்டத்தை கணக்கில் கொள்ளாமல், 2018 மார்ச், 31ஐ ஊதிய ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு பணியாளர்கள் பெற்று வந்த சம்பளத்தின் மீது, 20 சதவீதம் ஊதிய உயர்வு அனைவருக்கும் நிபந்தனையின்றி அனுமதிக்க வேண்டும்.கடந்த, 2021ம் ஆண்டுக்கு பின் ஓய்வு பெற்றுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் ஓய்வுகால நிதிப்பயன்கள் உடனடியாக விடுவிக்க வேண்டும். தேவையற்ற இடங்களில், முதல்வர் மருந்துகம் ஏற்படுத்தி, தினமும், 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். சங்கங்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் விவசாய உபகரணங்கள், வாகனங்கள், தேவையற்ற கட்டடங்கள் உள்ளிட்ட திட்டங்களின் காரணமாக ஏற்படும் இழப்புகள் அரசால் ஈடுசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, 25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், செயலாளர்கள், விற்பனையாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.