/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'டிராபிக்' போலீசாரிடம் போதை வாலிபர் ரகளை
/
'டிராபிக்' போலீசாரிடம் போதை வாலிபர் ரகளை
ADDED : அக் 06, 2025 04:19 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, வாலரைகேட் ரவுண்டானாவில், போக்குவரத்து போலீஸ் கந்தசாமி, நேற்று மாலை, 5:30 மணிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, கொக்கராயன் பேட்-டையில் இருந்து, 'மகேந்திரா செஞ்சுரோ' பைக்கில் வந்த வாலிபர், சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்தார். இதைக்-கண்ட போக்குவரத்து போலீஸ் கந்தசாமி, அவரை துாக்கி-விட்டார். அப்போது அவர் போதையில் இருந்ததால், கந்தசா-மியை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றார். அவரை பிடித்து தடுத்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்-பவ இடத்திற்கு வந்த போலீசார், போதை ஆசாமியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், திருச்செங்கோடு சந்தைப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன், 25, என்பதும், மது போதையில் அதவேகமாக பைக் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.