/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொப்பரை தேங்காய் ரூ.36,000க்கு விற்பனை
/
கொப்பரை தேங்காய் ரூ.36,000க்கு விற்பனை
ADDED : அக் 25, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடந்து வருகிறது. இதில், ராமாபுரம், பருத்திப்பள்ளி, கொளங்கொண்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், ஏழு மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில், முதல் தரம் கிலோ, 190.50 ரூபாய் முதல், 209 ரூபாய்; இரண்டாம் தரம், 150.50 ரூபாய் முதல், 155.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மழையால் வரத்து குறைந்ததால், 36,000 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 31ல் நடக்கிறது.

