ADDED : அக் 04, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை, சவுதாபுரம், ரங்கனுார் நால்ரோடு, எலந்தகுட்டை, பாதரை, ஆனங்கூர், வெள்ளிக்குட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி விவசாயம் நிறைந்தவையாகும். விவசாயத்தில் ஈடுபடுவர்கள் பலரும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். வெப்படை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் தொடர்ந்து மழை பெய்தது.
இந்த மழையை பயன்படுத்தி, மானாவாரி நிலத்தில் பல விவசாயிகள் கால்நடை தீவனமாக, வயலில் சோளப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதனால், சாகுபடி செய்த சோளப்பயிர் செழிப்பாக நல்ல வளர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.