ADDED : அக் 04, 2025 01:27 AM
ப.வேலுார், ப.வேலுார் மாரியம்மன் கோவில் வழியாக, காவிரி ஆற்றுக்கு செல்ல பிரதான சாலை உள்ளது. அப்பகுதியில், சில நாட்களுக்கு முன் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது மின்வாரியத்துக்குரிய, மின்சாரம் செல்லும் கேபிள் துண்டிக்கப்பட்டது. கேபிளை சரி செய்வதற்காக அப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது.
தற்போது அப்பகுதியில் பழுதான கேபிளை சரி செய்யாமலும், குழியை மூடாமலும் பல நாட்களாக அப்படியே உள்ளது. இதனால் மாரியம்மன் கோவில் மற்றும் காவிரி ஆற்றுக்கு செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இரவில் அப்பகுதியை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் குழியில் விழுந்து காயமடைகின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோண்டிய பள்ளத்தை மூட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.