sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட் கடைகள் போட்டி போட்டு ஏலம் எடுப்பு

/

மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட் கடைகள் போட்டி போட்டு ஏலம் எடுப்பு

மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட் கடைகள் போட்டி போட்டு ஏலம் எடுப்பு

மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட் கடைகள் போட்டி போட்டு ஏலம் எடுப்பு


ADDED : அக் 06, 2024 03:18 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளை, போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர்.

நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் நிறுத்துவதற்கு போதிய இட வசதி இல்லை. மேலும், நகரின் மையத்தில் அமைந்துள்-ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு, நாமக்கல் நகருக்கு புதிய ரிங் ரோடு அமைய உள்ள, முதலைப்பட்டி அருகே புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்-ளது. பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் திறந்து பயன்-பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.இங்கு, 50 பஸ்கள் நிறுத்துவதற்கான இட வசதியுடன், இரு ஓட்டல்கள் உள்ளிட்ட 57 கடைகள், பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்-டுள்ளது. கடைகளை மாத வாடகைக்கு விடுவதற்கான ஏலத்தை, வெளிப்படையாக நடத்த வேண்டும் என, வணிகர் சங்கம் உள்-ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இதை தொடர்ந்து, கடைகள் ஏலத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்-டது.

கடை ஏலம் எடுப்பவர்கள், 4 லட்சம் ரூபாய் டிபாசிட் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதைய-டுத்து, 100க்கும் மேற்பட்டவர்கள் டிபாசிட் செலுத்தி, ஏலத்திற்-காக விண்ணப்பம் செய்திருந்தனர். நேற்று முன்தினம் மாநக-ராட்சி அலுவலகத்தில், கமிஷனர் மகேஸ்வரி முன்னிலையில், நேரடி பொது ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விண்ணப்பம் செய்த-வர்கள் கலந்துகொண்டு, போட்டி போட்டு கடைகளை ஏலம் எடுத்தனர். ஒரு கடை குறைந்த பட்சம், 16 ஆயிரம் ரூபாய், அதி-கபட்சம், 42 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

ஏலத்தொகை அதிகம் நிர்ணயம் செய்யப்பட்டதால், 33 கடைகள் மட்டுமே ஏலம் விடப்பட்டது. மீதம் உள்ள, 24 கடைகள் விரைவில் ஏலம் விடப்பட்டும் என, மாநகராட்சி நிர்-வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us