/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மனித குலத்திற்கே எதிரானது ஊழல் லோக் ஆயுக்தா உறுப்பினர் பேச்சு
/
மனித குலத்திற்கே எதிரானது ஊழல் லோக் ஆயுக்தா உறுப்பினர் பேச்சு
மனித குலத்திற்கே எதிரானது ஊழல் லோக் ஆயுக்தா உறுப்பினர் பேச்சு
மனித குலத்திற்கே எதிரானது ஊழல் லோக் ஆயுக்தா உறுப்பினர் பேச்சு
ADDED : ஆக 27, 2025 01:27 AM
ராசிபுரம், ''மனித குலத்திற்கே எதிரானது ஊழல்,'' என, லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் பேசினார்.
ராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலை கல்லுாரியில், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் யூசுப் கான் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் சிவக்குமார், கிருஷ்ணம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில், தமிழக லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் பேசியதாவது:
ஊழல் என்பது தனிமனித உரிமைகளுக்கு எதிரான, ஒட்டுமொத்த மக்களின் உரிமைகளுக்கு எதிரான மீறலாகும். ஊழல் தனிமனித உரிமை மீறல் மட்டுமல்ல, மனித குலத்துக்கு எதிராக நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாகும்.
லோக் ஆயுக்தா என்றால், ஊழலுக்கு எதிரான மாநில அளவிலான உயர் விசாரணை அமைப்பாகும். அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும் வழிமுறைக்கான அமைப்பு லோக் அதாலத் ஆகும். லோக் ஆயுக்தா என்பதற்கும் லோக் அதாலத் என்பதற்கும் உள்ள வேறுபாட்டை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.