/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரத்தில் பருத்தி ஏலம் பூஜையுடன் தொடக்கம்
/
ராசிபுரத்தில் பருத்தி ஏலம் பூஜையுடன் தொடக்கம்
ADDED : டிச 02, 2025 02:37 AM
ராசிபுரம், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. இதற்காக, ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நடக்கிறது. சீசன் முடிந்ததால், கடந்த செப்., மாதம் பருத்தி ஏலம் முடிவுக்கு வந்தது. தற்போது, சீசன் தொடங்கியதால், நேற்று மீண்டும் பருத்தி ஏலம் தொடங்கியது. அதையொட்டி, நேற்று பருத்தி மூட்டைகளுக்கு பூஜை செய்து பருத்தி ஏலம் தொடங்கப்பட்டது.
அதில், ஆ.சி.எச்., ரக பருத்தி மூட்டை அதிகபட்சமாக, 7,769 ரூபாய், குறைந்தபட்சம், 6,892 ரூபாய், கொட்டு ரகம் அதிகபட்சம், 3,500 ரூபாய், குறைந்தபட்சம், 3000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. மொத்த, 269 மூட்டை பருத்தி, 7 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

