ADDED : டிச 02, 2025 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார் ப.வேலுார் அருகே, குப்புச்சிபாளையம், ஒழுகூர்பட்டி பகுதிகளில் உள்ள கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பரமத்தி எஸ்.ஐ., ராஜப்பன் தலைமையிலான குழுவினர், பரமத்தி பகுதிகளில் டீ, பெட்டி கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், ஒழுகூர்பட்டியில் உள்ள ஒரு
பெட்டிக்கடையில் ஆய்வு மேற்கொண்ட போது, குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், ஒழுகூர்பட்டியை சேர்ந்த சுந்தரன் மகன் பிரகாஷ், 45, கடை உரிமையாளரை கைது செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடைகளில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பரமத்தி இன்ஸ்பெக்டர்,
இந்திராணி எச்சரிக்கை விடுத்தார்.

