ADDED : மார் 24, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம், ஐ.சி.ஏ.ஆர்., சார்பில், அடர்வு முறையில் பருத்தி சாகுபடி செய்வது குறித்த உழவர் திருவிழா எருமப்பட்டியில் நடந்தது. விழாவில், தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவியர் கலந்துகொண்டு, பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்து அறிந்து கொண்டனர்.
பருத்தி விவசாயிகள் கலந்து கொண்டு, பருத்தி சாகுபடியை அதிகரிக்கும் தொழில்நுட்பம் குறித்து பயிற்சியளித்தனர். இந்த உழவர் திருவிழாவில், பருத்தி ரகம், கலப்பின விதை, ராசி விதைகளுக்கு ஏற்றவாறு பயிரிடுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.