/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மல்லசமுத்திரத்தில் ரூ.4.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
/
மல்லசமுத்திரத்தில் ரூ.4.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
மல்லசமுத்திரத்தில் ரூ.4.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
மல்லசமுத்திரத்தில் ரூ.4.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
ADDED : பிப் 06, 2025 05:56 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் டி.சி.எம்.எஸ்.,ல் வாரம்தோறும் புதன்கிழமையன்று, பருத்தி ஏலம் நடந்து வருகிறது.
இதில், மேல்முகம், பீமரப்பட்டி, செண்பகமாதேவி, ராமாபுரம், பருத்திப்பள்ளி, திம்மிபாளையம், பள்ளிப்பட்டி, கொளங்கொண்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏலத்தில் பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர்.
அதன்படி நேற்று நடந்த ஏலத்தில், 60 கிலோ எடையுள்ள, 200 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில், பி.டி.,ரகம் குவிண்டாலுக்கு, 7,670 ரூபாய் முதல் 8,380 ரூபாய் வரையிலும், கொட்டு பருத்தி, 3,760 ரூபாய் முதல் 4,840 ரூபாய் வரையிலும், மொத்தம் 4.50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.