/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெட்ரோல் கேனுடன் தற்கொலை செய்ய வந்த தம்பதியரால் பரபரப்பு
/
பெட்ரோல் கேனுடன் தற்கொலை செய்ய வந்த தம்பதியரால் பரபரப்பு
பெட்ரோல் கேனுடன் தற்கொலை செய்ய வந்த தம்பதியரால் பரபரப்பு
பெட்ரோல் கேனுடன் தற்கொலை செய்ய வந்த தம்பதியரால் பரபரப்பு
ADDED : நவ 28, 2025 01:55 AM
நாமக்கல், விவசாய நில வழித்தட பிரச்னை குறித்து, பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு, பெட்ரோல் கேனுடன் தற்கொலை செய்ய வந்த தம்பதியரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல், ஆண்டவர் நகரை சேர்ந்தவர் சிவசாமி, 63, இவரது மனைவி சாந்தி, 55. இவர்கள் இருவரும், நாமக்கல் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு நேற்று காரில் வந்தனர். பின், மறைத்து வைத்திருந்த, 5 லிட்டர் பெட்ரோல் கேனை எடுத்து, தற்கொலை செய்ய முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இருவரையும் தடுத்து கேனை பறிமுதல் செய்தனர். பின்னர், நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், மோகனுார் அடுத்த பரளி அரசநத்தத்தில், 10 ஏக்கர் விவசாய நிலம் இருப்பதாகவும், அந்த நிலத்திற்கு செல்ல வழித்தட பிரச்னை இருந்து வந்த நிலையில், அதிலிருந்து தீர்வு காணும் வகையில் சிலருக்கு சிவசாமி, 13 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றவர்கள் தங்களை ஏமாற்றியது குறித்து, மோகனுார் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை திருப்பி பெற்றுத்தர கோரி, மீண்டும் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து, நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

