ADDED : நவ 28, 2025 01:55 AM
மோகனுார், மோகனுார் அருகே, சாலை விபத்தில் வெற்றிலை வியாபாரி பலியானார். மோகனுார் அடுத்த மணப்பள்ளியை சேர்ந்தவர் தண்டபாணி, 50, வெற்றிலை வியாபாரி. இவர் கடந்த அக்., 6ம் தேதி வெற்றிலைகளை வேலூரில் விற்பனை செய்து விட்டு, தனது ஸ்கூட்டரில் வீடு நோக்கி மணப்பள்ளி வழியாக வந்து கொண்டிருந்தார். மணப்பள்ளி ஈஸ்வரன் கோவில் செல்லும் பிரிவு சாலையை கடக்க முயன்றார்.
அப்போது பின்புறம் வந்த மொபட், இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். தண்டபாணி, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மீண்டும் பரமத்தி வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த தண்டபாணி நேற்று இறந்தார். இதுகுறித்து அவரது மகன் சிவப்பிரகாஷ் மோகனுார் போலீசில் கொடுத்த புகார்படி, இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் விசாரித்து வருகிறார்.

