/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ெஹல்மெட் அணிந்தவர்களுக்கு போலீசார் இனிப்பு வழங்கல்
/
ெஹல்மெட் அணிந்தவர்களுக்கு போலீசார் இனிப்பு வழங்கல்
ெஹல்மெட் அணிந்தவர்களுக்கு போலீசார் இனிப்பு வழங்கல்
ெஹல்மெட் அணிந்தவர்களுக்கு போலீசார் இனிப்பு வழங்கல்
ADDED : நவ 28, 2025 01:54 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோட்டில், இரு சக்கர வாகனத்தில் ெஹல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு, போலீசார் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
திருச்செங்கோடு புது பஸ் ஸ்டாண்ட், சங்ககிரி ரோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவியரை, வீட்டிற்கு அழைத்து செல்ல இரு சக்கர வாகனங்களில், ெஹலமெட் இல்லாமல் பெற்றோர்கள் வந்தனர். சிலர் ெஹல்மெட் அணிந்து ஓட்டி வந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை நிறுத்தி, அவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினர்.
இந்நிலையில், ெஹல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில், 300க்கும் மேற்பட்ட வாகனங்களை பிடித்து வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். அப்போது ெஹல்மெட் அணியாமல், வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துகளில் உயிர் சேதம் ஏற்படுகிறது. எனவே, அனைவரும் கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும்.ெ ஹல்மெட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். முதல் முறை என்பதால் எச்சரித்து அனுப்புகிறோம். அடுத்த முறை பிடிபட்டால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ெஹல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர் என தெரிந்து கொள்ளும் வகையில், வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.
ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில், மீண்டும் ெஹல்மெட் இல்லாமல் சென்றால் வாகன உரிமம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், ெ ஹல்மெட் அணியாமல் வந்தவர்கள் நிறுத்தப்பட்டு, கட்டாயம் ெஹல்மெட் அணிவோம் என, அவர்கள் போலீசார் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

