ADDED : ஜூலை 26, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம் கிழக்கு காலனியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 48; கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 43; கடந்த, 20ல், 'சுசூகி அக்சஸ்' டூவீலரில், மோகன்ராஜ், தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும், கவுரி தியேட்டர் பின்புறம், சர்வீஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். இவர்களுக்கு எதிர் திசையில் வேகமாக வந்த, '
ஹோண்டா ஆக்டிவா' டூவீலர் மோதியது. இதில், கீழே விழுந்த தம்பதியர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள், அவர்களை மீட்டு கருங்கல்பாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், சங்ககிரி அருகே, காவேரிப்பட்டி புதுாரை சேர்ந்த முத்துராஜ், 43, என்பவரை கைது செய்தனர்.