/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் அருகே பெருமாள் கோவிலில் மாடு தாண்டும் நிகழ்ச்சி
/
ராசிபுரம் அருகே பெருமாள் கோவிலில் மாடு தாண்டும் நிகழ்ச்சி
ராசிபுரம் அருகே பெருமாள் கோவிலில் மாடு தாண்டும் நிகழ்ச்சி
ராசிபுரம் அருகே பெருமாள் கோவிலில் மாடு தாண்டும் நிகழ்ச்சி
ADDED : செப் 29, 2024 01:32 AM
ராசிபுரம் அருகே
பெருமாள் கோவிலில் மாடு தாண்டும் நிகழ்ச்சி
ராசிபுரம், செப். 29-
ராசிபுரம் அருகே, பெருமாள் கோவிலில் மாடு தாண்டும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
ராசிபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏகாதசி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். முக்கியமாக புரட்டாசி சனிக்கிழமைகளில் அபிஷேகம், ஆராதனை நடப்பதுடன் சுற்று வட்டார பகுதி மக்களும் வந்து வழிபாடு செய்வர். அதேபோல், புரட்டாசி, 2வது சனிக்கிழமை மாடு தாண்டும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
இடைப்பாடி, கொங்கணாபுரம், சின்ன திருப்பதி, கச்சிப்பள்ளி, பள்ளிப்பட்டி, மூங்கில்காடு உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர், நேற்று கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்தனர். ராசிபுரம் நகர எல்லை பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து சக்தி அழைத்து, மேளதாளங்களுடன் கோவில் காளை மாட்டை ராசிபுரம் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
பொன் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்த பின்னர், வெள்ளி காப்பு சாத்தப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து பக்தர்கள் மீது மாடுதாண்டும் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. கோவிலுக்கு மாடு அழைத்து வரும் வழியில் ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள், பக்தர்கள் அனைவரும் தரையில் படுத்துக்கொண்டனர். படுத்திருந்த பக்தர்களை மாடு மிதிக்காமல் தாண்டி செல்லும்போது அதன் கால் பக்தர்கள் மேல் படாமல் சென்றால் நினைத்த காரியம் நடக்கும். கால் பட்டு விட்டாலோ அல்லது தாண்டாமல் சென்றுவிட்டாலோ பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறாது என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பிரசாதம் வழங்க ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோவில், கைலாசநாதர் ஆலயம், நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் பிரசாத குழுவினர் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.