ADDED : மே 15, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம் :கொல்லிமலை, திருப்புலிநாடு பஞ்., சுள்ளுக்குழிப்பட்டி மலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 45; விவசாயி. இவர் விட்டின் அருகே மாட்டு கொட்டகை அமைத்து, இரண்டு பசு மாடுகள் வளர்த்து வந்தார்.
இந்நிலையில், கொல்லிமலையில், நேற்று மாலை திடீரென இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட பயங்கர இடி தாக்கி, கொட்டகையில் கட்டியிருந்த பசுமாடு உயிரிழந்தது. மற்றொரு பசுமாட்டிற்கு கண் பாதிக்கப்பட்டது.