/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை
/
ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை
ADDED : ஏப் 10, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. அதிகாலை, 4:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த, இரண்டு வாரங்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்திருந்தது. மேலும், நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வாங்கி செல்ல ஆந்திரா, கேரளாவில் இருந்து வியாபாரிகள் வரத்து அதிகரித்திருந்ததால், 2.50 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையானது.