/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய கழிப்பிடம் கட்டித்தர கோரி சி.பி.எம்., காத்திருப்பு போராட்டம்
/
புதிய கழிப்பிடம் கட்டித்தர கோரி சி.பி.எம்., காத்திருப்பு போராட்டம்
புதிய கழிப்பிடம் கட்டித்தர கோரி சி.பி.எம்., காத்திருப்பு போராட்டம்
புதிய கழிப்பிடம் கட்டித்தர கோரி சி.பி.எம்., காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 24, 2025 01:22 AM
குமாரபாளையம், குமாரபாளையம் நகராட்சியில், 12 வது வார்டு காந்திபுரம் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிப்பிடம், தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள், நகராட்சி அலுவலகம் முன் நேற்று காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.
கிளை செயலர் சண்முகம் தலைமையில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நகர தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் சக்தி வேல், குமாரபாளையம் நகர செயலர் கந்தசாமி, முன்னாள் நகர செயலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர். 100க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி தலைவர் விஜய கண்ணன், ஆணையாளர் ரமேஷ், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கழிப்பிடத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில், பராமரிப்பு செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.