தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ டிஜிட்டலில் பயிர் கணக்கெடுப்பு

டிஜிட்டலில் பயிர் கணக்கெடுப்பு

டிஜிட்டலில் பயிர் கணக்கெடுப்பு


ADDED : டிச 27, 2025 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2025 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்-களில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இப்பணியில் தன்னார்வலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள், துாய்மை இந்தியா இயக்க காவ-லர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். நடப்பு ரபி பரு-வத்திற்கு பயிர் சாகுபடி பரப்பு கிராமந்தோறும் சர்வே எண் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு வரு-கிறது. இந்த விவரங்கள், 'தமிழ்நாடு டிஜிட்டல் பயிர் சர்வே' என்ற செயலி மூலம் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் இந்த பயிர் சாகுபடி விபரங்கள், வரு-வாய்த்துறையினரால் வழங்கப்படும் அடங்க-லுக்கு மாற்றாக அமைய வாய்ப்புள்ளது.

அரசு மானிய திட்டங்கள் பெறுவதற்கும், விவ-சாய கடன் வாங்குவதற்கும் இது மிக முக்கிய ஆவணமாக அமையும்.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது வயலில் சாகுபடி செய்யப்-பட்டுள்ள பயிர், கிணறு, கட்டடங்கள் உள்ளிட்ட விபரங்கள் முறையாக பதிவு மேற்கொள்ளப்படு-கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கணக்கெடுப்பு பணிக்கு வரும் பதிவாளர்-களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us