sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குடிநீர் கட்டணம் 5 சதவீதம் உயர்வு மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

/

குடிநீர் கட்டணம் 5 சதவீதம் உயர்வு மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

குடிநீர் கட்டணம் 5 சதவீதம் உயர்வு மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

குடிநீர் கட்டணம் 5 சதவீதம் உயர்வு மறுபரிசீலனை செய்ய கோரிக்கை


ADDED : டிச 27, 2025 05:28 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சியின் சாதாரண கூட்டம், தலைவர் நளினி சுரேஷ்பாபு தலை-மையில் நடந்தது. கமிஷனர் வாசுதேவன் முன்-னிலை வகித்தார்.

கூட்டத்தில் விவாதம் வருமாறு:

கார்த்திகேயன், அ.தி.மு.க.,: காவிரி குடிநீர் வழங்குவதற்கான கட்டணம், 5 சதவீதம் உயர்த்-தப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் என, தெரிவித்த நிலையில், 8 நாட்கள், 10 நாட்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் முறையாக வழங்காத நிலையில் எதற்கு கூடுத-லாக கட்டணம் செலுத்த வேண்டும் என பொது-மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில், கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் புதிதாக, 200 குடிநீர் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எப்-படி சாத்தியமாகும். எனவே, குடிநீர் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.தலைவர்: குடிநீர் கட்டணம், ஒரே நேரத்தில் அதிகப்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான், 5 சத-வீதம் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சாலை விரி-வாக்க பணி காரணமாக, மெயின் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் சீர்படுத்தப்-படும்.

ரமேஷ், தி.மு.க.,: எட்டிமடைபுதுாரில், குடியி-ருப்புகள் அதிகம் உள்ள பகுதியில், குழாய் மூலம் காஸ் கொண்டு செல்லும் திட்டத்திற்கான கன்ட்ரோல் ரூம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகி-றது. குடியிருப்பு பகுதியில் ஆபத்தான காஸ் கன்ட்ரோல் யூனிட் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தலைவர்: பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ள காஸ் கன்ட்ரோல் ரூம் குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கார்த்திகேயன், அ.தி.மு.க.,: கூட்டத்தில் கோரிக்-கைகளை தெரிவிப்பது, சுய விளம்பரத்திற்கு அல்ல. சேர்மன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு செயல்படுத்த வேண்டும் என்பதற்கு தான். ஆனால், சேர்மன் உத்தரவிட்டும், அதிகாரிகள் செயல்படுத்துவது இல்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us