/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மரகதலிங்க தரிசனம் அதிகாலை 3:00 மணி முதல் பஸ் இயக்க ஏற்பாடு

ADDED : டிச 27, 2025 05:29 AM
திருச்செங்கோடு; ''திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்-கோவிலில், மரகதலிங்க தரிசனத்திற்கு வசதி-யாக, அதிகாலை, 3:00 மணி முதல் பஸ் இயக்கப்-படும்,'' என, உதவி ஆணையர் ரமணிகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்த-நாரீஸ்வரர் கோவிலில், மார்கழி மாத உற்சவத்-தையொட்டி, மலையில் மரகதலிங்க தரிசனம் நடந்து வருகிறது. இதற்காக, பல்வேறு மாவட்-டங்களில் இருந்து, அதிகாலை முதலே பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் வசதிக்-காக, அதிகாலை, 3:00 மணி முதல் தேவஸ்தான பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மலை மீதுள்ள கார் ஸ்டாண்ட் முழுவதும் டூவீலர்களில் வரும் பக்தர்களால் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருவதால், காரில் வரும் பக்தர்கள் மலை வழித்தடத்தி-லேயே நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு சென்று விடுகின்றனர். இதனால் தேவஸ்தான பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்காக, கார் ஸ்டாண்டில் கார்கள் நிறுத்த இடமில்லாத நிலையில், நாமக்கல் சாலையில் உள்ள பச்சி-யம்மன் கோவில் வளாகத்தில் கார்களை நிறுத்த, இலவச பார்க்கிங் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்-டுள்ளது. அங்கு பக்தர்கள் கார்களை நிறுத்திக்-கொள்ளலாம். இதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.