/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கருப்பசாமி கோவிலில் 2,000 பேருக்கு கறி விருந்து
/
கருப்பசாமி கோவிலில் 2,000 பேருக்கு கறி விருந்து
ADDED : ஆக 07, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அருகே, கருப்பசாமி கோவில் திருவிழாவையொட்டி, 2,000க்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்து போடப்பட்டது.
நாமகிரிப்பேட்டை அடுத்த வடுகம் பகுதியில் பிரசித்தி பெற்ற கருப்பசாமி, தாவாயம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று நடந்த திருவிழாவில், வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து, காணிக்கையாக செலுத்தப்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு கறி சமைத்தனர்.
இதில், 500 கிலோவுக்கு மேல் கறி சமைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். 2,000க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள், சமபந்தி விருந்தாக சாப்பிட்டு சென்றனர்.