ADDED : அக் 23, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது, சாலையோரம் உள்ள மரங்களில் பட்டுப்போன கிளைகள் சாலையில் விழுவ தால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், மின் கம்பிகளில் விழுந்தால் மின் தடை மட்டுமின்றி தீ விபத்து, உயிர்சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, நெடுஞ்சாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்களை உடனடியாக வெட்டி அகற்றும்படி நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதையடுத்து ராசிபுரத்தில் இருந்து ஈரோடு செல்லும் சாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்றும் பணி, நேற்று நடந்தது.

