/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் இன்று சைக்கிள் நாளை மாரத்தான் போட்டி
/
நாமக்கல்லில் இன்று சைக்கிள் நாளை மாரத்தான் போட்டி
ADDED : செப் 27, 2025 01:21 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், இன்று காலை, 6:30 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில், சைக்கிள் போட்டி நடக்கிறது. இதில், 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 15 கி.மீ., மாணவியருக்கு, 10 கி.மீ., துாரம், 15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 20 கி.மீ., துாரமும், மாணவியருக்கு, 15 கி.மீ., துாரமும் சைக்கிள் போட்டி நடக்கிறது.
நாளை காலை, 6:30 மணிக்கு, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து, மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. இதில், 17 முதல், 25 வயது வரை உள்ள ஆண்களுக்கு, 8 கி.மீ., பெண்களுக்கு, 5 கி.மீ., போட்டி நடக்கிறது. 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, 10 கி.மீ., பெண்களுக்கு, ஐந்து கி.மீ., துாரம் மாரத்தான் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு, 5,000 ரூபாய், 3,000 ரூபாய், 2,000 ரூபாய் மற்றும் 4 முதல், 10 இடங்களில் வருபவர்களுக்கு, 250 ரூபாய் வீதம் காசோலை மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.