/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியதால் பாதிப்பு
/
ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியதால் பாதிப்பு
ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியதால் பாதிப்பு
ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியதால் பாதிப்பு
ADDED : அக் 08, 2024 04:10 AM
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை ரயில்வேகேட் அருகில் சுரங்கப்பாதை செல்கிறது. இந்த பாதை வழியாக மக்கள் வாகனங்களில் காவிரி ஆறு படுகை, கரூர், திருச்சி செல்வதற்காக செல்கின்றனர். கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் மழை நீர் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.மேலும் ரயில்வேகேட் அருகில், இரவு நேரங்களில் ரயில்கள் நிறுத்தப்படுவதால் பஸ் பயணிகள் சுரங்கப்பாதை வழியாக நடந்து செல்ல வேண்டியுள்ளது. அப்போது அதிகமான மழை நீர் தேங்கிய நிலையில், மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்-ளது. எனவே, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.