/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தாஜ் நகரில் சேதமடைந்த நிழற்கூடம் மழை, வெயிலில் காத்திருக்கும் அவலம்

ADDED : நவ 28, 2024 06:51 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர் பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து ஏராளமான பயணிகள் பஸ்சில் பயணித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக, இருக்கையுடன் கூடிய நிழற்கூடம்
அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிழற்கூடம் சிறிது சிறிதாக சேதம-டைந்து தற்போது இருக்கைகள் மட்டுமே
உள்ளன. அதுவும் சரிந்து கிடக்கிறது. பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இருந்த இடமே தெரியாமல் உள்ளது. திறந்த
வெளியாக காணப்படுகிறது. மழை வந்தாலும், வெயில் அடித்தாலும் திறந்தவெளியில் தான் பய-ணிகள்
காத்திருக்கின்றனர்.இந்த நிழற்கூடத்தை சீரமைத்து தர வேண்டும் என, சம்பந்தப்-பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை
வைத்தும் நடவ-டிக்கை எடுக்கவில்லை. தற்போது, மழைக்காலம் என்பதால் மாணவர்கள், பொதுமக்கள்
மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பயணிகளின் நலன்கருதி, புதிய இருக்கைகளுடன் கூடிய
நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்ப-குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.