/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுவர் பூங்கா மீது செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம்
/
சிறுவர் பூங்கா மீது செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம்
சிறுவர் பூங்கா மீது செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம்
சிறுவர் பூங்கா மீது செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம்
ADDED : ஜன 20, 2025 07:00 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் உள்ள, 18 வார்டுகளில், 30,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகள் விளையாட, பொழுதுபோக்க சரியான இடம் இல்லை. இந்நிலையில், ஆத்துார் மெயின் ரோட்டை ஒட்டிய வேலவன் நகரில், சிறுவர் பூங்கா அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது.
ஆனால், பூங்காவிற்கு மேல் உயர் மின்னழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. காற்று பலமாக வீசும்போது கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசும்படி மோதிக்கொள்கின்றன. இதனால், தீப்பொறி பறக்கிறது. இதை பார்க்கும் பெற்றோர் பதறி அடித்து ஓடுகின்றனர். பூங்காவை இன்னும் முறைப்படி திறக்கவில்லை. எனவே, பூங்கா திறக்கும் முன், உயர் மின்னழுத்த கம்பிகளை பூங்காவிற்கு வெளியே மாற்ற வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.