/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விஷ கூல்டிரிங்ஸ் கொடுத்து மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகள் கைது
/
விஷ கூல்டிரிங்ஸ் கொடுத்து மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகள் கைது
விஷ கூல்டிரிங்ஸ் கொடுத்து மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகள் கைது
விஷ கூல்டிரிங்ஸ் கொடுத்து மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகள் கைது
ADDED : பிப் 09, 2025 07:03 AM
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த குச்சிபாளை-யத்தை சேர்ந்தவர் தனலட்சுமி, 77; இவரது மகன் சரவணபெ-ருமாள், 49; திருச்செங்கோடு, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வி, 44, என்பவரை கலப்பு திருமணம் செய்து-கொண்டார். சரவணபெருமாளுக்கு குடிப்பழக்கம் உள்ளது. மாமியார் தனலட்சுமியிடம், தமிழ்செல்வி குடும்ப செலவுக்கு பணம் கேட்டுள்ளார். தனலட்சுமி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் மாமியாரை தீர்த்துக்கட்டி சொத்து முழுவதையும் அனுபவிக்க திட்டமிட்டார். இதற்காக, தமிழ்செல்வி, அவரது தாய் பாப்பாத்தி இருவரும், தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றிய கோமதி, 37, என்பவரை அணுகியுள்ளனர். மூவரும் திட்டம் தீட்டிய நிலையில், 'மக்களை தேடி மருத்துவம்' திட்-டத்தில் சோதனை செய்வதுபோல், நேற்று காலை, 11:00 மணிக்கு கோமதி சென்றுள்ளார். தனலட்சுமிக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்த நிலையில், 'எனர்ஜி டிரிங்' என விஷ மாத்திரை கலந்த கூல்டிரிங்ஸை கோமதி கொடுத்துள்ளார். இதை குடித்த தனலட்சுமிக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவரை மீட்ட தனலட்சு-மியின் பேத்தி கீர்த்தி, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். அங்கு விஷம் கலந்த கூல்டிரிங்ஸ் தரப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து புகார்படி நர்ஸ் கோமதி, தமிழ்செல்வி, பாப்-பாத்தியை, திருச்செங்கோடு ரூரல் போலீசார் கைது செய்தனர்.

