/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் லாரி மகள் உடல் நசுங்கி பலி: தாய் படுகாயம்
/
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் லாரி மகள் உடல் நசுங்கி பலி: தாய் படுகாயம்
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் லாரி மகள் உடல் நசுங்கி பலி: தாய் படுகாயம்
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் லாரி மகள் உடல் நசுங்கி பலி: தாய் படுகாயம்
ADDED : ஜூலை 18, 2025 08:49 PM

நாமக்கல்:திருச்சி, 'பாரத் பெல்' நிறுவனத்திற்கு, இரும்பு பிளேட் ஏற்றி வந்த டிரெய்லர் லாரி, டூ - வீலர் மீது கவிழ்ந்ததில், இளம்பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, திருச்சி பாரத் பெல் நிறுவனத்திற்கு, இரும்பு பிளேட் லோடு ஏற்றிக்கொண்டு 30 அடி நீள டிரெய்லர் லாரி, நாமக்கல் வழியாக சென்றது. லாரியை, நாமக்கல் அடுத்த கொசவம்பட்டியை சேர்ந்த வரதராஜ் ஓட்டினார்.
நாமக்கல் நகருக்குள் டிரெய்லர் லாரி செல்ல முடியாது என்பதால், கரூர் வழியாக புறவழிச்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.
நாமக்கல், நல்லிபாளையத்தை சேர்ந்த பூபதி மனைவி சுதா, 43. இவரது மகள் சினேகா, 22. இவர், பெங்களூருவில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு, தாய், மகள் இருவரும், 'டி.வி.எஸ்., சுசூகி அக்சஸ்' டூ - வீலரில், கீரம்பூர் எட்டிக்கை அம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
வள்ளிபுரம் புறவழிச்சாலையில், சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரியை கடக்க முயன்ற போது, பின்னால் வந்த டிரெய்லர் லாரி, டூ - வீலர் மீது மோதாமல் இருப்பதற்காக வலதுபுறமாக டிரைவர் திருப்பியுள்ளார். பின், மீண்டும் இடதுபுறம் திருப்பிய போது, மீடியன் மீது லாரி மோதி சாலையில் கவிழ்ந்தது.
இதில், டூ - வீலரில் சென்று கொண்டிருந்த தாய், மகள் இருவரும், லாரிக்கு அடியில் சிக்கினர். சினேகா சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சுதா, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
லாரியில் இருந்த இரும்பு பிளேட்டுகள் சரிந்து விழுந்ததில், சாலையோரம் நிறுத்தியிருந்த கார், இரு கடைகள், இரு மின் கம்பங்கள் சேதமாகின. நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.